Sunday, November 11, 2012

சொல் வரிசை - 10

 
கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . அன்புக்கோர் அண்ணன்
2 . உயிருள்ளவரை உஷா
3 . இருவர் உள்ளம்

4 . வரலாறு
5 . நான் பாடும் பாடல்
6 . கூடல் நகர்
7 . புது வசந்தம் 
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்புகள் :
 
சொல் வரிசை விடைக்கான பாடல்:
இடம் பெறும் சொற்கள் ஊர், ஆறு, மொழி பற்றியது.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 9 க்கான விடைகள்:
திரைப்படம்                                      பாடலின் தொடக்கம்                                           தொடக்கச் சொல்

1 . காதலிக்க வாங்க                       உனக்கும் எனக்கும் உறவு தந்தது                            உனக்கும்
2 . முகராசி                                      எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்                      எனக்கும்
3 . இதய வீணை                                            ஆனந்தம் இன்று ஆரம்பம்                                                            ஆனந்தம்

4 . வேட்டை                                     தம் தம் தம் தம் தம் தீராத விளையாட்டு                தம்
5 . போக்கிரி ராஜா                          விடிய விடிய சொல்லி தருவேன்                             விடிய
6 . கடவுளைக் கண்டேன்               விடிய விடிய பேசினாலும் தூக்கம்                          விடிய
7 . பிராப்தம்                                    சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்                 சொந்தம்

மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

உனக்கும் எனக்கும் ஆனந்தம் - தம்
விடிய விடிய சொந்தம்

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: ஸ்ரீராகவேந்திரர்

எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav , முகிலன், 10அம்மா
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
 
ராமராவ்

2 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முகிலன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete