Tuesday, November 6, 2012

எழுத்துப் படிகள் - 8

எழுத்துப் படிகள் - 8 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . கலவர திருமணம்
2 . கிழக்கு ஆசிய நாட்டு இல்லம்
3 . இல்வாழ்வின் ஒளிவிளக்கு
4 . இயற்றாத விதிகள்
5 . அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான விகடகவி
6 . ஆங்கிலத்தில் நீதியோடு டி.வி. நிகழ்ச்சி நடத்துபவர்
7 . கிராமமா? நகரமா?


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின்      3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.


விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.



விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 7 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 குடும்ப கௌரவம்
2 அன்புக்கோர் அண்ணன்
3 கடன் வாங்கி கல்யாணம்
4 பார்த்தால் பசி தீரும்
5 இரு கோடுகள்
6 பொற்சிலை
7 மேட்டுக்குடி
இறுதி விடை: கற்புக்கரசி

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, Padhmavathi Thirumudi 
 

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

3 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்

    ReplyDelete