Friday, February 15, 2013

சொல் வரிசை - 19



கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     அபியும் நானும்
2.     கோயம்புத்தூர் மாப்பிள்ளை
3.     குருதட்சணை
4.     பார்த்தால் பசி தீரும்
5.     மந்திரி குமாரி
6.     நானும் ஒரு பெண்

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:



சொல் வரிசை விடைக்கான பாடல்: இச்சாதாரி பாம்புகள் பாடும் பாடல்
 

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 18 க்கான விடைகள்:

திரைப்படம்                                                                       பாடலின் தொடக்கம்                                                       தொடக்கச் சொல்


1 . இருவர் மட்டும்                                           ரோஜா பூவின் மலர் வாசனை                               ரோஜா
2 . டாக்டர் சிவா                                               மலரே குறிஞ்சி மலரே                                           மலரே
3 . புள்ள குட்டிக்காரன்                                    ராஜகுமாரி இரத்தினபுரியில் இருந்தாளாம்           ராஜகுமாரி

4 . தூள்                                                             ஆசை ஆசை இப்பொழுது                                      ஆசை

5 . சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்          கிளியே கிளியே கீகீ கிளியே                                 கிளியே
6 . அன்னை                                                      அழகிய மிதிலை நகரினிலே                                 அழகிய
7 . சரஸ்வதி சபதம்                                          ராணி மகாராணி                                                    ராணி


மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசை கிளியே அழகிய ராணி


இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      வீரத்திருமகன்


எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav

இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. ரமேஷ் வைத்யா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    பாட்டுக்களின் முதல் வரிகளில் குறைந்தது மூன்று சொற்களாவது எழுதி அனுப்புங்கள். பாட்டு வரிகளின் சொற்களை குறிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வலைப்பிரிவுகளில் பார்த்து எழுதி அனுப்பினால் விடைகள் முழுமை பெற்றதாக இருக்கும். எனினும் உங்கள் முதல் முயற்சிக்கு மிக்க நன்றியும், பாராட்டும்.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete