Monday, August 12, 2013

எழுத்து வரிசை - 33


எழுத்து வரிசை புதிர் - 33 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1   ஆயுதமிழந்த விஜய் = சூர்யா  (2)                                             -  2007 

2   ஈன்ற சேயை காசாக்கிய தாய்  (3,3,3,3)                                    -  1958  
3   சின்னதா கயித்தை திரித்து கதை விட்டவள்  (6)                 -  1992
4   கிராமத்து தங்கத்தையா பெயராக வைத்தனர்?   (7,5)       -  எம்.ஜி.ஆர்.
5   மணம் புரிந்துகொள்      (5,5)                                                        -  1955
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை: (3,2)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 32 க்கான விடைகள்: 
  
1   நெருப்பு, கவிதை, காற்று மூன்றும் சேர்ந்த பண்டிகை (4)      -  2007           - மெட்டி 
2   நாணயத்தை சுண்டிப் பார்த்தால் விழுவது  (2,3)                       -  1969, 2011 - பூவா தலையா   
3   ஊர் சுற்றித் திரிபவர்கள் (5)                                                               -  2009          - நாடோடிகள்    
4   முகிலுக்கும் நீர்வேட்கை இருக்கும்   (7,5)                                    -  1980            - மேகத்துக்கும் தாகமுண்டு 
5   கமலின் பிம்பம் உண்மையாகிறது   (3,6)                                      -  1978            - நிழல் நிஜமாகிறது 
6   ரேவதி முதன் முதல் மேடையேறும் நேரம்     (6,2)                    -  1990             -  அரங்கேற்ற வேளை  
7   தக்க தருணத்தில் சென்ற உயிரை மீட்கும் மூலிகை  (3,4)      -  1957         - சமய சஞ்சீவி 

எழுத்து வரிசை புதிர் விடை -         துள்ளி விளையாடு

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:  முத்து, Madhav, மதுமதி, 10அம்மா, யோசிப்பவர்  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 

ராமராவ்

 

3 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete