Tuesday, March 28, 2017

சொல் அந்தாதி - 76



சொல் அந்தாதி - 76  புதிருக்காக, கீழே   5 ( ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மனிதனின் மறுபக்கம் - கல்லுக்குள்ளே வந்த ஈரம்
   
2.  காதலிக்க நேரமில்லை     

3.  வெண்ணிற ஆடை      

4.  செல்வம்     

5.  54321  
                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

1 comment:

  1. 1. மனிதனின் மறுபக்கம் - கல்லுக்குள்ளே வந்த ஈரம்

    2. காதலிக்க நேரமில்லை - என்ன பார்வை உந்தன் பார்வை

    3. வெண்ணிற ஆடை - அம்மம்மா காற்று வந்து

    4. செல்வம் - ஓடும் மேகமே ஓடும் மேகமே

    5. 54321 -நெஞ்சமே என் நெஞ்சமே

    - Madhav

    ReplyDelete